உலக செய்திகள்

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,597 பேருக்கு தொற்று + "||" + UK records 201 COVID deaths, 30,597 new cases

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,597 பேருக்கு தொற்று

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,597 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,597 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 73,12,683 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31,296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 58 லட்சத்து 78 ஆயிரத்து 889 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 12,99,147 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்கத்தில் இன்று 846 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,577 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. கர்நாடகத்தில் இன்று 378 பேருக்கு கொரோனா; 464 பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகத்தில் தற்போது 8,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 454 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
5. கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.