மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்


மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
x
தினத்தந்தி 21 Oct 2021 1:03 AM GMT (Updated: 21 Oct 2021 1:03 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காபூல்,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் இந்திய  வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜே. பி. சிங்  கலந்து கொண்டார். 

அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி ஆவார். இஸ்லாமிய அமீரக தலீபான் தூதுக்குழுவின் துணைப்பிரதமர், மவுல்வி அப்துல் சலாம் ஹனபி தலைமையில் ஒரு உயர்மட்ட  தூதுக்குழு அவரை சந்தித்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் அதற்கான வாக்குறுதியை இந்தியா அளித்துள்ளது என்றும் தலீபான் செய்தித் தொடர்பாளர்  சபிஹுல்லா முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கஷ்டமான சூழ்நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என மாஸ்கோ பேச்சவார்த்தையில் கலந்து கொண்ட இந்திய தூதர் ஜே பி சிங் தெரிவித்தார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த கருதுகின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய தரப்பு, ஆப்கன் மக்களுக்கு விரிவான மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்நிலையில் உள்ளதாக அறிவித்தது  என்று அதில்  முஜாஹித் தெரிவித்தார்.


Next Story