100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு


100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு
x
தினத்தந்தி 21 Oct 2021 7:25 PM GMT (Updated: 21 Oct 2021 7:25 PM GMT)

100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தடுப்பூசி கிடைக்க உதவுவதற்காக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து பணியாற்றி வருகிறது. 

இந்த அறக்கட்டளையின் இணைத் தலைவர் என்ற முறையில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியா, முற்றிலும் மாறுபட்ட சுகாதார (கொரோனா வைரஸ் தொற்று) சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்படும் திறமையை கண்டு பிரமிப்பு அடைந்தேன். தற்போது இந்தியா 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவின் அனுபவத்தில் இருந்து மற்ற நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளலாம். இந்திய மக்கள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியாக்கி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story