உலக செய்திகள்

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: முன்னாள் புலனாய்வு அதிகாரி + "||" + Saudi crown prince suggested killing King Abdullah, ex-official says

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: முன்னாள் புலனாய்வு அதிகாரி

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: முன்னாள் புலனாய்வு அதிகாரி
மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தநிலையில் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். நேர்காணலில் அவர் கூறியதாவது:-

சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷியாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார். அந்த நேரத்தில், இளவரசர் முகமது பின் சல்மான் அரசில் எந்த மூத்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னரை கொல்ல நினைத்தார். இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதித்துள்ளது.
2. லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த சவுதி,பஹ்ரைன் - காரணம் என்ன?
லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
3. சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவுகணை வீச்சு
சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணை நடு வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது. எனினும் இதில் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். வீடுகள் சேதமடைந்தன.
4. வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி - சவுதி அரசு முடிவு
தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
5. சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.