உலக செய்திகள்

காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்! + "||" + Pakistan orders Monday closure of schools and offices in Lahore to cut smog

காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!

காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது
லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் அதிகரித்து வரும் காற்று மாசு எதிரொலியாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் அங்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாளாக அமையும்.

உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது

காற்றின் தரக் குறியீடு எண் 348ஆக கடந்த வாரம் பதிவாகி இருந்த நிலையில், இன்னும் மோசமான் நிலைமைக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் வேகமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

அங்கு நிகழும் கடுங்குளிர், எரிபொருள் வாயுக்கள் மற்றும் விவசாய பொருட்கள் கழிவுகள் எரிப்பு போன்றவை காற்று மாசு அதிகரிக்க காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதே நடைமுறையை பாகிஸ்தான் அரசும் கையாண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
2. பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
3. பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
4. பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் பலி
பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடில் பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.