உலக செய்திகள்

சிங்கப்பூரில் 2 இந்தியர்களின் மரண தண்டனை உறுதி + "||" + Singapore Upholds Death Penalty Of 2 Indian-Origin Men For Drug Trafficking

சிங்கப்பூரில் 2 இந்தியர்களின் மரண தண்டனை உறுதி

சிங்கப்பூரில் 2 இந்தியர்களின் மரண தண்டனை உறுதி
சிங்கப்பூர் ஐகோர்ட்டு கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனையும், பிரவினாஷ் சந்திரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப்பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி (வயது 27) மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதே போல் அவர்களிடம் இருந்து அந்த போதைப்பொருளை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிங்கப்பூர் ஐகோர்ட்டு கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனையும், பிரவினாஷ் சந்திரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்த 3 பேரும், இந்த தீர்ப்பை எதிர்த்து சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேரின் மரண தண்டனையையும், பிரவினாஷ் சந்திரனின் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் ‘அசாதாரணமாக உயர்ந்த’ கொரோனா பாதிப்பு...!
சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.
2. சிங்கப்பூரில் முககவசம் அணியாத இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை
கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் இன்று வரை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலைத்தடுக்க முககவசம் அணிவதை பல நாடுகள் கட்டாயம் ஆக்கி உள்ளன. அதில் சிங்கப்பூரும் அடங்கும்.