தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலி


தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 11:12 PM GMT (Updated: 29 Nov 2021 11:12 PM GMT)

தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.


ஜன்ஜிபார்,


தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.  இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.  கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து, போலீசார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.  38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.  கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் எதிரொலியாக, ஆமைக்கறி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story