ஹபீஸ் சயீத் இல்லம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை + "||" + Pak court sentences 4 to death in case of blast outside Hafiz Saeed's house
ஹபீஸ் சயீத் இல்லம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இல்லம் அருகே கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றது.
லாகூர்,
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி குண்டு தாக்குதலில் பல வீடுகள், கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்த தாக்குதல் தொடர்பாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படும் பீட்டர் பால் டேவிட், சஜ்ஜத் ஷா, ஜியாவுல்லா மற்றும் ஆயேஷ் பிபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் குற்றவாளிகள் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆயேஷ் பிபி என்ற பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.