பிரான்சில் காட்டுத்தீபோல பரவுகிறது ஒரே நாளில் 4.64 லட்சம் பேருக்கு கொரோனா


பிரான்சில் காட்டுத்தீபோல பரவுகிறது ஒரே நாளில் 4.64 லட்சம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 7:08 PM GMT (Updated: 19 Jan 2022 7:08 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது.


பாரீஸ்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இது அதற்கு முந்தைய நாள் பாதிப்பான 3 லட்சத்து 68 ஆயிரத்து 149-விட சுமார் 1 லட்சம் கூடுதல் ஆகும்.

3,881 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அங்கு கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்களுக்கு அந்த நாட்டின் அரசு நிதி உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.

Next Story