பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு:  4 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 4:09 AM GMT (Updated: 29 Jan 2022 4:09 AM GMT)

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பொது மக்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து நடைபெறும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது.

அந்த வகையில், இந்த மாகாணத்தில் உள்ள கெச் மாவட்டத்தின் சோதனைச் சாவடி மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ராணுவம் தரப்பில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் தேரா புக்டி மாவட்டத்தின் மாட் பகுதியில் சாலையோத்தில் வெடிகுண்டு வெடித்ததில்  அப்பாவி பொது மக்கள் 4 பேர் உயிரிழந்தனர். 10 மேற்பட்டவர்கள் படுகாங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தகவலறிந்த பாதுகாப்பு படையினர் வீரர்கள், சம்பவம் நடந்த இடத்தை சுற்றி கண்காணித்து வருகின்றனர். மேலும் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக் கண்டம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் அப்துல் குதுஸ், மாகாணத்தின் அமைதியைக் கெடுக்க எதிரிகள் மீண்டும் ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


Next Story