1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போர் இனப்படுகொலையை நியாயப்படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்!


1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போர் இனப்படுகொலையை நியாயப்படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்!
x
தினத்தந்தி 18 April 2022 12:35 PM GMT (Updated: 18 April 2022 12:35 PM GMT)

வங்கதேச போரின் போது, வங்கதேச மக்களை படுகொலை செய்ததை பாகிஸ்தான் நியாயப்படுத்த முயல்கிறது என்று குளோபல் ஸ்ட்ராட் வியூ என்ற ஊடகக் குழு செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போரின் போது, வங்கதேச மக்களை படுகொலை செய்ததை பாகிஸ்தான் நியாயப்படுத்த முயல்கிறது என்று குளோபல் ஸ்ட்ராட் வியூ என்ற  ஊடகக் குழு செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேச இனப்படுகொலைக்கு, பாகிஸ்தான் வங்கதேசத்தின் மீது முழு சம்பவத்தையும் குற்றம் சாட்டி வருகிறது. மேலும்,  பாகிஸ்தானின் போர்க் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வங்கதேசத்தின் முயற்சிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் எதிர்க்கின்றனர்.

1971  போரின் போது, வங்காளிகள் தவிர்த்து கொல்லப்பட்ட பிற மக்களின் கொலைகளை, ஒரு போராட்டமாக மறுவடிவமைப்பதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது பாகிஸ்தான்  குற்றம் சாட்டி உள்ளது என்று குளோபல் ஸ்ட்ராட் வியூ  செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க் குற்றவாளிகளின் மீதான போலி விசாரணைகள் அபத்தமானது என்று பாகிஸ்தான் நம்புகிறது. தங்கள் சமூகத்தினரைத் தாக்கி, கொன்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று பாகிஸ்தான் கருதுகிறது. வங்கதேச அரசால்  வங்காள மக்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமே நினைவு கூரப்படுகின்றன என்று பாகிஸ்தான் கருதுகிறது.

மேலும், இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் காலிஸ்தான் இயக்கம் போன்ற போர்க் குழுக்களுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை வழங்குகிறது. வங்கதேசத்தில் உள்ள இந்து மத பேராசிரியர்கள், பிரிவினைவாத உணர்வுகளை தங்களது மாணவர்களிடையே பரப்புவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

இவ்வாறு குளோபல் ஸ்ட்ராட் வியூ  வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக, 1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போது கொடூரமான படுகொலையை அங்கீகரிப்பது தொடர்பான சட்டப்பூர்வ  விரிவாக்கம் தேவை என்று  குளோபல் ஸ்ட்ராட் வியூ  வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story