உயிர்பிழைக்க வேண்டுமெனில் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையவும் - உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா இறுதி எச்சரிக்கை


Image Source: www.dtnext.in
x
Image Source: www.dtnext.in
தினத்தந்தி 19 April 2022 11:23 AM GMT (Updated: 19 April 2022 11:23 AM GMT)

தேவையில்லாமல் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என நம்பி, உக்ரைன் வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிடுகின்றன.

மாஸ்கோ,

மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு ரஷியா ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டது. 

முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று காணொலி வாயிலான உரையில் பேசும்போது, “கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா  தாக்குதலைத் தொடங்கியுள்ளது.ரஷியா நேற்று ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் அங்குள்ள நகரங்களைத் தாக்கியது. டான்பாஸ்க்கான போர் தொடங்கிவிட்டது” என்று உரையில் கூறினார்.

இந்த நிலையில்,அவரது உரைக்குப் பிறகு ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இறுதி எச்சரிக்கை வந்துள்ளது.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

“ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் போராளிகள் நடத்தும் விவேகம் இல்லாத எதிர் நடவடிக்கைளை நிறுத்துவதற்கு உரிய உத்தரவுகளை வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால் உங்கள் அதிகாரிகள் எந்த உத்தரவையும் தரப்போவதில்லை. தேவையில்லாமல் உக்ரைன் ராணுவ அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என நம்பி, உக்ரைன் வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிடும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும். மரியுபோலில் முன்னேறி வரும் ரஷியப் படைகளை எதிர்க்கும் உக்ரேனியப் போராளிகள் பேரழிவில் சிக்கி  இருந்தனர்.

உக்ரைனின் தேசியவாத பட்டாலியன்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வெளிநாட்டு கூலிப்படைகளுக்கும் ரஷிய தரப்பிலிருந்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒரு வாய்ப்பை ரஷியா வழங்குகிறது. ஆயுதங்களைக் கீழே போடும் ஒவ்வொரு உக்ரைன் வீரரும் உயிர் பிழைப்பது உறுதி"

இவ்வாறு ரஷியா கூறியுள்ளது.  


Next Story