இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புகிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 May 2022 11:21 PM GMT (Updated: 14 May 2022 11:21 PM GMT)

உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்ப உள்ளது.

கொழும்பு, 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மே முதல் ஆகஸ்டு வரையிலான யாலா சாகுபடிக்கு யூரியா கிடைக்கவில்லை.

எனவே இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இது தொடர்பாக மத்திய உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதிலும் இலங்கைக்கு இந்த உதவியை மத்திய அரசு செய்கிறது. இந்த யூரியா உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்காக மத்திய அரசுக்கு இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா நன்றி தெரிவித்து உள்ளார்.



Next Story