அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி


அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி
x

விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கிடைத்தபோதிலும், விமான நிலையத்தை நெருங்குவதற்குள் விபத்துக்குள்ளானது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னசி மாநிலம், நாஷ்வில்லியில் நெடுஞ்சாலை அருகே இன்று சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாஷ்வில்லி பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், விமான விபத்து குறித்த செய்தியை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜான் சி டியூன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்ஜின் செயலிழந்ததால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள், விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Next Story