கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் ஜோ பைடன்...!


கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் ஜோ பைடன்...!
x

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னரே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பைடன் தன்னை தானே மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா தொற்று காரணமாக தனது பயணங்களை ஜோ பைடன் தள்ளி வைத்தார். தொடர்ந்து அதிபர் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

"அதிபர் தொடர்ந்து நன்றாக உள்ளார்" பைடன் தொடர்ந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை என்று ஜோ படைனின் டாக்டர் கெவின் ஓ'கானர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்றார்.

ஜோ பைடனின் உத்தியோகபூர்வ அட்டவணையின்படி, அவர் 8-ம் தேதி வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட கென்டக்கியின் தெற்கு மாநிலத்திற்குச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story