தென் கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவிக்கம் அதிகரிப்பு


தென் கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவிக்கம் அதிகரிப்பு
x

தென் கொரியாவில் 2023-ம் ஆண்டிலும் பணவிக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சியோவில்,

தென் கொரியாவில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2022-ம் ஆண்டில் நுகர்வோர் விலை குறியீடு 107.71 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 5.1 சதவீதம் அதிகம் என்றும் 1998-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக அதிகமான பதிவு என்றும் கூறப்படுகிறது.

தென் கொரிய மக்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி தங்கள் அன்றாட செலவுகளை குறைப்பது குறித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தென் கொரியாவில் 2023-ம் ஆண்டிலும் பணவிக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும், மின்கட்டணம் 50 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Next Story