கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்


கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி178 ஆப்கானிய கைதிகளை ஒப்படைத்த ஈரான்
x

கோப்புப்படம் 

ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

டெஹ்ரான்,

ஈரான் நாட்டுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த 2012-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி ஈரானில் இருந்த 178 ஆப்கானிய கைதிகள் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் தங்களது மீதி தண்டனை காலத்தை அனுபவிப்பார்கள்.

இதேபோல் ஆப்கானிஸ்தானும் 3 ஈரானிய கைதிகளை அந்த நாட்டின் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் இதுவரை ஆயிரத்து 131 ஆப்கானிய கைதிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரான் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மந்திரி அஸ்கர் ஜலாலியன் தெரிவித்துள்ளார்.


Next Story