'இந்தியா குறித்து பாரபட்ச பார்வை' - அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்


இந்தியா குறித்து பாரபட்ச பார்வை - அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்
x

இந்தியா குறித்து அமெரிக்க பத்திரிக்கை, செய்தி நிறுவனங்கள் பாரபட்சமாக செய்தி வெளியிடுவதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

வாஷிங்டனில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் அமெரிக்காவில் அதிகரிப்பதகாக நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' உள்பட பல செய்தி நிறுவனங்களை மறைமுகமாக விமர்ச்சித்து கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், செய்தி நிறுவனங்களை பாருங்கள். இந்த நகரத்தில் (வாஷிங்டன்) உள்ள செய்தித்தாள் நிறுவனம் உள்பட சில செய்தித்தாள் நிறுவனங்கள் என்ன எழுத உள்ளன என்பது குறித்து உங்களுக்கு தெரியும். அதில் பாரபட்சம் உள்ளது என்பது எனது பார்வை. பாரபட்சத்திற்கான முயற்சிகளும் உள்ளன.

இந்தியா எந்த அளவுக்கு அதன் வழியில் செல்கிறதோ, இந்தியாவின் பாதுகாவலர்கள், இந்தியாவின் வடிவமைப்பைபாளர்களாக கூறிக்கொள்பவர்கள் இந்தியாவில் தங்கள் நிலையை இழந்து வருகின்றனர். இதில் சில விவாததாரர்கள் வெளியே வருகின்றனர்' என்றார்.


Next Story