பாகிஸ்தான்: பி.டி.ஐ. துணை தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி, தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை


பாகிஸ்தான்: பி.டி.ஐ. துணை தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி, தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 4 Feb 2024 3:24 AM GMT (Updated: 4 Feb 2024 3:46 AM GMT)

தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஷா மஹ்மூத் குரேஷி போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஷா மஹ்மூத் குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஷா மஹ்மூத் குரேஷி மீதான வழக்கில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஷா மஹ்மூத் குரேஷி போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story