சவுதி அரேபிய பிரதமர் ஆகிறார் இளவரசர் முகமது பின் சல்மான்


சவுதி அரேபிய பிரதமர் ஆகிறார் இளவரசர் முகமது பின் சல்மான்
x

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


ரியாத்,


சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அரசாட்சியில் உள்ள மந்திரி சபையை கலைத்து புதிய மந்திரி சபையை நிறுவியுள்ளார். இதன்படி, சவுதி அரேபிய இளவரசராக முடி சூடிய முகமது பின் சல்மான் இனி சவுதியின் பிரதமர் ஆக பதவியில் நீடித்திடுவார்.

இதேபோன்று, இளவரசர் காலித் பின் சல்மான் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியாகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

இளவரசர் துர்க்கி பின் முகமது பின் பஹத் பின் அப்துல்அஜீஸ் மாநில மந்திரியாகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் துர்க்கி பின் பைசல் விளையாட்டு மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கல்வி மந்திரியாக யூசப் அல் பென்யான், ஆற்றல் துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான், வெளிவிவகார மந்திரியாக இளவரசர் பைசல் பின் பர்ஹான் பதவி வகித்திடுவார்கள்.

இதனை தொடர்ந்து, முதலீட்டு மந்திரியாக காலித் பின் அப்துல்அஜீஸ் அல் பாலி, உள்துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சவுத் பின் நயீப் பின் அப்துல்அஜீஸ், நிதி மந்திரியாக முகமது பின் அப்துல்லா அல் ஜடான் ஆகியோரும் பதவி வகிக்க உள்ளனர்.


Next Story