தென்கொரியாவில் தொடங்கிய ராணுவ கண்காட்சி: 55 நாடுகள் கலந்து கொள்கின்றன


தென்கொரியாவில் தொடங்கிய ராணுவ கண்காட்சி: 55 நாடுகள் கலந்து கொள்கின்றன
x

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான ராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது.

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுப்போர் பயிற்சியில் அவ்வப்போது ஈடுபடுகின்றன. மேலும் வருகிற 2027-ம் ஆண்டுக்குள் ராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 4-வது பெரிய நாடாக மாறுவதை தென்கொரியா நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான ராணுவ கண்காட்சியை தென்கொரியா நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ராணுவ கண்காட்சி சியோல் ஏ.டி.எக்ஸ்-2023 என்ற பெயரில் சியோங்னாம் அருகே உள்ள விமான தளத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 55 நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கு பெற்றுள்ளன.


Next Story