இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது இலங்கை அரசு


இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது இலங்கை அரசு
x

அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் நடந்த கடுமையான உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் படகுகளில் இந்தியாவிற்கு அகதிகளாக தப்பி வந்தனர். இதில் தமிழகத்தில் சுமார் 68 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவிற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏகனாயகே இந்த குழுவை நியமித்துள்ளார்.

அதிபரின் சிறப்பு செயலாளர் சந்திமா விக்கிரமசிங்கே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள், குடிவரவுத்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

தமிழக முகாம்களில் தங்கியுள்ள 3,800 இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப தயாராக இருப்பதாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் மூலம் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story