மெக்சிகோவில் வேன் மீது டிரக் மோதிய விபத்தில் சிக்கி 26 பேர் பலி..!!


மெக்சிகோவில் வேன் மீது டிரக் மோதிய விபத்தில் சிக்கி 26 பேர் பலி..!!
x

மெக்சிகோவில் வேனும் டிரக் டிரெய்லரும் மோதிய விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

மெக்சிகோ,

வடக்கு மெக்சிகோ மாநிலமான தமவுலிபாசில் நேற்று டிராக்டர்-டிரெய்லர் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமவுலிபாஸின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, மாநில தலைநகர் சியுடாட் விக்டோரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது.

தனியார் போக்குவரத்து வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று சிறுவர்கள் உள்பட பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நடந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது டிரெய்லரை ஏற்றிச் சென்ற டிரக் விபத்து நடந்த இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த அனைவரின் அடையாளங்களையும் அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை, எனவே டிரக்கின் ஓட்டுநரும் விபத்தில் கொல்லப்பட்டாரா அல்லது அவர் தப்பியோடினாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story