இன்று இந்தியா வருகிறார் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர்


இன்று இந்தியா வருகிறார் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர்
x

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (யுஎன்ஜிஏ) தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் (28,29) அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார். இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக அவர் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அறிக்கையின்படி, அப்துல்லா ஷாஹித் தனது அலுவலகத்தில் இருந்து மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் பயணம் செய்கிறார். பொதுச் சபையின் 76வது அமர்வின் தலைவராக அப்துல்லா ஷாஹித்தின் ஓராண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story