உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு
x

கோப்புப்படம் 

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் பல மாதங்களை கடந்த நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 2.5 பில்லியன் டாலருக்கு புதிய ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்து உள்ளது. இந்த தொகுப்பில் உக்ரைன் கோரிய போர் டாங்கிகள் இடம்பெறவில்லை.

எனினும் இதில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பெரிய மற்றும் சிறிய வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று பென்டகனின் அறிக்கை கூறுகிறது.


Next Story