மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா விலகாது - அதிபர் ஜோ பைடன்


மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா விலகாது - அதிபர் ஜோ பைடன்
x

Image Courtesy: AFP

மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா விலகிச்செல்லாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரியாத்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

4 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் சவுதி அரேபியாவின் ஜூடா நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜோ பைடன் பங்கேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், ஈராக் பிரதமர் முஸ்தபா அல் ஹதீமி, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மார்ஷல் அல் அகமது அல் ஜபீர் அல் ஷபா, குவைத் அரசர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானி, ஜோர்டான் இளவரசர் அப்துல்லா, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பக்ரைன் அரசர் ஹமிது பின் அஸ்லாம் கலிபா, எகிப்து அதிபர் அப்தில் ஃபிடா எல் சிசி, ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நுகன், ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு பின் தைமூர் அல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கா விலகி செல்லாது. மத்திய கிழக்கில் வெற்றிடத்தை உருக்கவும் அந்த வெற்றிடத்தை சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் நிரப்பவும் அமெரிக்கா விடாது' என்றார்.


Next Story