ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா + "||" + Tiruttani Murugan Temple Andi Krithigai Festival

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா
திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா 15–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடக்கிறது.

திருத்தணி,

தமிழ்நாட்டில் முருக பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளில் திருத்தணி 5–வது திருத்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தி, பயபக்தியுடன் தாங்கள் கொண்டுவரும் மலர் காவடிகளை முருக பெருமானுக்கு செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தி கொள்வார்கள்.

இந்த ஆண்டு ஆடிகிருத்திகை திருவிழர் வருகிற 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. முன்னதாக 13–ந்தேதி ஆடி அஸ்வினி விழாவும், 14–ந்தேதி ஆடி பரணி விழாவும் நடத்தப்படுகிறது. ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்படுகிறது.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மலர் காவடிகள் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்லேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழாவில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில உள்ள சென்னை சாலை, திருப்பதி சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, பொதட்டூர்பேட்டை சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவணபொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும். ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து மேற்பார்வயில திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கா, இணைஆணையா சிவாஜி மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.