ஆன்மிகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா + "||" + Karthikai Deepa festival

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திருக்கழுக்குன்றம்,

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வந்து இறைவனை வழிபட்டனர்.

மாலை 4 மணிக்கு, அகண்ட தீபம் ஏற்றுவதற்காக திருக்கழுக்குன்றம் முழுவதும் எண்ணெய் சேகரிக்கப்பட்டது. பின்னர் 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலைக்கோவிலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் தீபத்தை தரிசனம் செய்தனர்.

மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மலைக்கோவிலில் அகண்டத்தில் ஏற்றபட்ட தீபத்தை தரிசித்து, அதன் பின்பு அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், ஈஸ்வரர், அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
2. புஞ்சைபுளியம்பட்டி அருகே துணிகரம் கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடிய கொள்ளையர்கள், அங்கிருந்த பீரோவை தூக்கிச்சென்று கோவிலுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
3. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4. திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி குப்த கங்கையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
5. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடக்கம்
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.