திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
x

பிரம்மோற்சவத்துக்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டரில் மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது,

பக்தர்கள் வசதிக்காக 95 கோடி ரூபாய் செலவில் குளியலறை, கழிவறை உள்ளிட்டவற்றுடன் கூடிய ஐந்தாவது மண்டபம் கட்டப்படும்.

பிரம்மோற்சவத்துக்கு பிறகு திருப்பதியில் உள்ள கவுண்டரில் மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும். அதேபோல் டிக்கெட் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்கும் வசதி அமலில் இருக்கும்.

மேலும், பிரம்மோற்சவத்துக்கு பிறகு காலை 10 மணி முதல் 12 மணி வரை பக்தர்களுக்கு விஐபி தரிசன அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.


Next Story