சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோலாகலம்


சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோலாகலம்
x

வடசென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று நடைப்பெற்றது.

சென்னை:

தமிழக பக்தர்கள் சார்பில் பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரமோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. புகழ் பெற்ற இந்த திருக்குடைகள் ஊர்வலம், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை, இன்று நடைபெற்று வருகிறது. இதனால் வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story