சூரிய கிரகணத்தின்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கம் போல நடை திறந்திருக்கும்


சூரிய கிரகணத்தின்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கம் போல நடை திறந்திருக்கும்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தின்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தின்போது நடை அடைக்கப்படுவதில்லை. எனவே, கிரகணம் தொடங்கும்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் வருகிற 25-ந் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி, 6.30 வரை நீடிக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இந்நிலையில், சூரிய கிரகணம் நிகழும் நாளன்று, கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மரபு படி சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

கோவில் குளத்தில் தீர்த்தவாரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கியமான விழாக்களின் போது கோவில் குளங்கள் மற்றும் தென்பெண்ணை செய்யாறு, கவுதம நதி போன்றவற்றில் தான் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். சூரிய, சந்திர கிர கணங்களின்போது அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி, சூரிய கிரகணம் வரும் 25ம் தேதி மாலை நிகழ உள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவில் ஆன்மிக மரபுபடி, அன்றைய தினம் வழக்கம் போல நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தவித தடையும் இல்லை. இது, அக்னி ஸ்தலம் என்பதால், இங்கு மட்டும் கிரகணத்தின் போது கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.

சந்திர கிரகணத்தின் போது, கிரகணம் முடியும்போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 25ம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் உதய நாழிகையில், கோவில் 4ம் பிர காரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது.


Next Story