இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 24 Jan 2024 1:21 AM GMT (Updated: 24 Jan 2024 3:51 AM GMT)

கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-10 (புதன்கிழமை)

திதி: இரவு 10.07 க்கு மேல் பவுர்ணமி திதி

நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம்

யோகம்: சித்தயோகம்

ராகு காலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் நாட்கதிரறுப்பு விழா. கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிஷேகம். ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்.

ராசிபலன்

மேஷம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.

ரிஷபம்

வசதிகள் அதிகரிக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

மிதுனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வருமான பற்றாக்குறை அகலும்.

கடகம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தொல்லை அகலும், நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பங்கு தாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் பிறர் நலனில் அதிக அக்கறை தீட்டுவீர்கள். மங்கல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் சம்பள உபர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.

கன்னி

காலை நேரத்திலேயே கலகலப் காலைபான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வர். விட்டுப்போனவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.

துலாம்

வழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிட செலவுகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை ஏற்படலாம். தொழில் கூட் டாளிகளால் தொல்லை உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும், தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

மகரம்

புதிய பாதை புலப்படும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து தருவர். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். காட்டுவீர்கள். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொருள் வரவு திருப்தி தரும். திருமண தடை அகலும். குடும்பத்துடன் ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.


Next Story