இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 23 March 2024 6:43 AM IST (Updated: 23 March 2024 7:47 AM IST)
t-max-icont-min-icon

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில்வளம் சிறப்பாக அமையும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 10-ந்தேதி சனிக்கிழமை.

திதி: திரயோதசி திதி காலை(8.49)க்கு மேல் சதுர்த்தசி திதி.

நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் (60.00) நாள் முழுவதும்.

யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், பூம்பாவையை உயிர்ப்பித்தருளல். பழனி ஸ்ரீ முருகப்பெருமான் மாலை கோவிலில் தங்க ரதத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திரிசிராமலை ஸ்ரீ தாயுமானவர் குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பவனி. பரமகுடி ஸ்ரீ அன்னை முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வியாபார விருத்தியுண்டு.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்புகளை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

மிதுனம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். குடும்பப் பொறுப்புகள் கூடும்.

கடகம்: யோசித்துச் செயல்படவேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்ய நேரிடும். உத்தியோகத்தில் குறுக்கீடுகள் வரலாம்.

சிம்மம்: யோகமான நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

கன்னி: திறமை பளிச்சிடும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு வரன்கள் வாயில்தேடி வரும்.

துலாம்: முன்னேற்றம் ஏற்படும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்: யோகமான நாள். திருமணப் பேச்சு முடிவாகும். திடீர் பயணம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

மகரம்: தடைகளும், தாமதங்களும் ஏற்படும் நாள். தனவரவில் தட்டுப்பாடு உருவாகும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.

கும்பம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் இருந்த வில்லங்கங்கள் விலகும். பிள்ளைகள் குடும்பப்பொறுப்புணர்ந்து செயல்படுவர்.

மீனம்: பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வாகன மாற்றம் உறுதியாகும்.

சந்திராஷ்டமம்: மகரம்.


Next Story