வெளிச்சம் பிரதிபலிக்க உதவும் கண்ணாடிகள்
வெளிச்சம் என்பது இயற்கையாக இருந்தாலும், செயற்கையாக இருந்தாலும் அதை பல மடங்காக வீடுகளுக்குள் பிரதிபலிக்க கண்ணாடிகளை பயன்படுத்தும் முறை உலக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பல்வேறு அளவுள்ள கண்ணாடிகள் ஒளியை கச்சிதமாக பிரதிபலிக்கும்படி அமைப்பதன் மூலம் அறைகளுக்குள் கண்களை கூசாத வெளிச்ச சூழலை கொண்டு வரலாம். பொதுவாக, கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிர்ப்புறத்தில் இருக்கும்படி மாட்டி வைக்கவேண்டும்.
மேலும், கண்ணாடிகளால் செய்யப்பட்ட பல்வேறு அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தினாலும், ஒளியின் பிரதிபலிப்பு மிதமாக இருக்கும். கதவுகள், ஜன்னல்கள் மற்றும் ‘வென்டிலேட்டர்கள்’ ஆகிய இடங்களில் தக்க விதங்களில் கண்ணாடிகளை பயன்படுத்தி வீடுகளுக்குள் நல்ல வெளிச்சத்தை பிரதிபலிக்க வைக்கலாம் என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Related Tags :
Next Story