தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 474 ரன்கள் இலக்கு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 474 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 16 July 2017 9:30 PM GMT (Updated: 16 July 2017 8:02 PM GMT)

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 335 ரன்களும், இங்கிலாந்து 205 ரன்களும் எடுத்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. டீன் எல்கர் 80 ரன்களும், அம்லா 87 ரன்களும் சேர்த்தனர். இடையில், குயின்டான் டி காக் (1 ரன்), பவுமா (15 ரன்) சோபிக்க தவறினாலும் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (63 ரன்), பிலாண்டர் (42 ரன்) அணிக்கு வலுவூட்டினார்.

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 474 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியிருப்பதால் இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 284 ரன்களுக்கு மேல் ‘சேசிங்’ செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.





Next Story