இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2017 8:28 PM GMT (Updated: 23 July 2017 8:28 PM GMT)

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நாளை மறுதினம் தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சன்டிமாலுக்கு பதிலாக ஹெராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்–ரவுண்டர் தனஞ்ஜெயா, வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். புதுமுக சுழற்பந்து வீச்சாளராக புஷ்பகுமாரா இடம் பிடித்துள்ளார். இலங்கை அணி வருமாறு:– ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், குணரத்னே, நிரோ‌ஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, குணதிலகா, தில்ருவான் பெரேரா, லக்மல், லாஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, மலின்டா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.


Next Story