கிரிக்கெட்

போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட் கோபம் + "||" + Pakistan Dont Need to Beg India to Play Cricket Javed Miandad

போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட் கோபம்

போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம் மியான்டட்  கோபம்
இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கோபமாக கூறியுள்ளார்.#cricket / #JavedMianda
கராச்சி

பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்களுடன் இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட், கராச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது,  கூறியதாவது:-

தங்களுடன் போட்டியை நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கெஞ்சி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக பொருளாதார கட்டமைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேம்படுத்த வேண்டும். இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது. எனவே அவர்களுடன் கிரிக்கெட் என்பது பற்றிய நினைப்பை மறந்து விட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் விளையாடவில்லை. அதற்காக நமது கிரிக்கெட் நசிந்துவிட்டதா என்ன? இப்போதுதான் சிறப்பாக விளையாடி வருகிறோம். சாம்பியன் கோப்பையை வென்றது நல்ல உதாரணம் என்றார்.

#bcci / #iccchampions / #IndoPak / #cricket / #JavedMianda / #pakistan