கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் மீண்டும் நியமனம் + "||" + Captain of Sri Lanka Cricket Team Mathews is again appointed

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் மீண்டும் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் மீண்டும் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு மேத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் கடந்த ஜூலை மாதத்தில் விலகினார். உள்ளூரில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை முதல்முறையாக இழந்ததால் மேத்யூஸ் கேப்டன் பொறுப்பை துறந்தார். அதன் பின்னர் உபுல் தரங்கா, திசரா பெரேரா ஆகியோர் இலங்கை அணியின் கேப்டன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர். ஆனாலும் அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் குறுகிய வடிவிலான (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) போட்டி தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மீண்டும் மேத்யூஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை அவர் கேப்டன் பொறுப்பில் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் கேப்டனாக தினேஷ் சன்டிமால் நீடிப்பார்.