கிரிக்கெட்

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,122 வீரர்கள் + "||" + IPL cricket players

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,122 வீரர்கள்

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,122 வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் கெய்ல், யுவராஜ்சிங், மேக்ஸ்வெல் உள்பட 1,122 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த முறை 8 அணிகளின் சார்பில் மொத்தம் 18 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். மெகா ஏலம், வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஏலத்திற்கு மொத்தம் 282 வெளிநாட்டவர் உள்பட 1,122 வீரர்கள் பதிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிடடுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், அஸ்வின், ஹர்பஜன்சிங், ரஹானே, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், முரளிவிஜய், ஷிகர் தவான் ஆகிய இந்தியர்களுடன் அதிரடி சூரர்கள் கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், எவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (இங்கிலாந்து), மேக்ஸ்வெல், கிறிஸ் லின், ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா), காலின் முன்ரோ (நியூசிலாந்து) உள்ளிட்டோரும் அடங்குவர்.

மேலும் கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக இரண்டு சதங்கள் விளாசிய ஹசிம் அம்லா, தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் வில்லயம்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மலிங்கா, மோர்னே மோர்கல், ரபடா ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஏலத்திற்கு தங்களின் பெயரை பதிவு செய்துள்ள வீரர்களின் எண்ணிக்கை நாடுகள் வாரியாக வருமாறு: இந்தியா-840, ஆஸ்திரேலியா-58, ஆப்கானிஸ்தான்-13, வங்காளதேசம்-8, இங்கிலாந்து-26, அயர்லாந்து-2, நியூசிலாந்து-30, ஸ்காட்லாந்து-1, தென்ஆப்பிரிக்கா-57, இலங்கை-39, அமெரிக்கா-2, வெஸ்ட் இண்டீஸ்-39, ஜிம்பாப்வே-7

இவர்களில் 281 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். 838 வீரர்கள் சர்வதேச போட்டியில் கால்பதிக்காத உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள். எஞ்சிய 3 பேர் ஐ.சி.சி.யின் உறுப்பு நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய வீரர்களின் எண்ணிக்கையான 840 பேரில் 62 பேர் மட்டும் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின், தவான், கம்பீர், தினேஷ் கார்த்திக், யுவராஜ்சிங், பிரன்டன் மெக்கல்லம், கெய்ல், பொல்லார்ட், குயின்டான் டி காக், ஸ்டோக்ஸ், மேக்ஸ்வெல் உள்பட 36 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் இருந்து தான் இவர்களின் ஏலத்தொகை ஆரம்பிக்கும்.

ஆரோன் பிஞ்ச், அமித் மிஸ்ரா, மில்லர், பிளிஸ்சிஸ், ஜோ ரூட் மற்றும் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் தொடக்க விலை ரூ.1½ கோடியாகும். ஸ்டெயின், டுமினி, மலிங்கா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா உள்ளிட்டோரின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கும்பொழுது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2. ‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; 13 வீரர்கள் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தெற்கே ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் 13 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.
4. சோமாலியாவில் ராணுவ தளம் மீது தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்; 27 வீரர்கள் பலி
சோமாலியா நாட்டில் ராணுவ தளத்தின் மீது நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.