கிரிக்கெட்

மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி? + "||" + Will Delhi shock at Mumbai?

மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி?

மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றி, 7 தோல்வி என்று இதுவரை 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இது தான் அந்த அணியின் கடைசி லீக் ஆட்டம் ஆகும். பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேறுவதை தவிர வழியில்லை. அது மட்டுமின்றி 2-3 அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்பு இருப்பதால் ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தொடரின் கடைசி பகுதியில் சிறப்பாக விளையாடி மீண்டுள்ள மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும் (கடைசி 6 ஆட்டத்தில் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கடைசி இடம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மும்பையின் கொண்டாட்டத்தை சீர்குலைத்து விடலாம். முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்ததால் டெல்லி டேர்டெவில்சின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. டெல்லி அணியின் 4 வெற்றிகளில் மூன்று, உள்ளூர் மைதானத்தில் கிடைத்தவை ஆகும். இந்த ஆட்டமும் சொந்த மண்ணில் ஆடுவது டெல்லிக்கு சாதகமான வி‌ஷயமாகும். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இருந்தது. மீண்டும் மும்பைக்கு டெல்லி அணி அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி புறப்பட்டனர்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.
3. டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
4. உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
5. கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது
கட்டுப்பாட்டை டெல்லி மக்கள் நேற்று இரவு நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததால், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது.