கிரிக்கெட்டில் இருந்து பத்ரிநாத் ஓய்வு


கிரிக்கெட்டில் இருந்து பத்ரிநாத் ஓய்வு
x
தினத்தந்தி 31 Aug 2018 9:00 PM GMT (Updated: 31 Aug 2018 8:34 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத் முதல் தரம் உள்பட எல்லா வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் நேற்று அறிவித்தார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத் முதல் தரம் உள்பட எல்லா வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் நேற்று அறிவித்தார். 38 வயதான பத்ரிநாத் இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். 145 முதல் தர போட்டியில் ஆடியுள்ள அவர் 32 சதம் உள்பட 10,245 ரன்கள் குவித்துள்ளார். பத்ரிநாத் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு காரைக்குடி காளை அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டில் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார்.


Next Story