ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா


ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 30 Sep 2018 9:30 PM GMT (Updated: 30 Sep 2018 8:28 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

கிம்பெர்லி,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று நடந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை. கேப்டன் பிளிஸ்சிஸ் காயத்தால் அவதிப்படுவதால் டுமினி அணியை வழிநடத்தினார்.

இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சிகும்புரா 27 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபடா, பெலக்வாயோ, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த சிறிய இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 26.1 ஓவர்களில எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் 44 ரன்கள் எடுத்தார். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி புளோம்பாண்டீனில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story