கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒரு நாள் போட்டி: விசாகப்பட்டினத்திற்கு மாற்றம் + "||" + India-West Indies match in 2nd ODI: Transition to Visakhapatnam

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒரு நாள் போட்டி: விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒரு நாள் போட்டி: விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் 2வது ஒரு நாள் போட்டி, விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இலவச டிக்கெட்டுகள் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்க முடியும். ஆனால் இது போதாது என்று வாதிட்ட மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், கூடுதலாக டிக்கெட்டுகள் தராவிட்டால் போட்டியை நடத்தமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியது.


இந்த நிலையில் இந்தூரில் நடக்க இருந்த 2-வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த அஸ்வின், ஷமி!
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
4. இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலமான போகிபீல் மேம்பாலம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
5. இந்திய-அமெரிக்க விமானப்படை 12 நாட்கள் கூட்டு பயிற்சி: மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது
இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான 12 நாட்கள் கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது