கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயிலுக்கு இடமில்லை + "||" + Chris Gayle To Miss ODI, T20 Series For West Indies Against India

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயிலுக்கு இடமில்லை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்:  வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயிலுக்கு இடமில்லை
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3-இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  2-வது டெஸ்ட் போட்டி வரும், 12 ஆம் தேதி துவங்க உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக உள்ள ஒருநாள் மற்றும் 20-ஓவர் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், அனைவரும் ஆச்சர்யப்படும் படியாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், இடம் பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக கிறிஸ் கெயில், இந்திய அணியில் இடம் பெற விருப்பம் இல்லை என கூறியதால், கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் வருமாறு:- ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பபியன் ஆலன், சுனில் ஆம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்திரபால் ஹேம்ராஜ், ஷிம்ரோன் ஹேட்மைர், ஷை ஹோப், அல்சாரி ஜோஷப், எவின் லெவிஸ், ஆஸ்லி நர்ஸ், கீமோ பவுல், ரவ்மன் பவுல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒஷ்னே தாமஸ்,

20 ஓவர் போட்டிக்கான வீரர்கள்

கார்லஸ் பிராத்வைத் (கேப்டன்), பாபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஒபெட் மெக்கய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், க்ரை பீரே, கிரன் பொல்லர்டு, ரவ்மன் பவுல், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரூ ரஸ்ஸல், ஷேர்பேனே ரதர்போர்டு, ஒஷனே தாமஸ்


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...