கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் + "||" + One Day Cricket Against New Zealand: Malinga appointed as captain of Sri Lanka

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்குகிறது. இலங்கை டெஸ்ட் அணிக்கு சன்டிமால் கேப்டனாக இருக்கிறார்.


டெஸ்ட் தொடர் முடிந்ததும் நடக்கும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆச்சரியப்படும் வகையில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அணியில் இருந்து ஓராண்டு ஓரங்கட்டப்பட்டிருந்த 35 வயதான மலிங்கா மூன்று மாதங்களுக்கு முன்பு தான் மறுபிரவேசம் செய்தார். அதற்குள் கேப்டன் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா செயல்படுவார். அஷந்தா டி மெல் தலைமையிலான புதிய தேர்வு கமிட்டி இந்த அதிரடி மாற்றத்தை செய்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது கேப்டனாக இருந்த சன்டிமால், ஒரு வீரராக அணியில் தொடருகிறார். உடல்தகுதியை காரணம் காட்டி நீக்கப்பட்ட மேத்யூசும் அணிக்கு திரும்புகிறார்.