கிரிக்கெட்

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: இமாசலபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி + "||" + Mushtaq ali 20 Over cricket: Tamil Nadu fails at the Himachal Pradesh

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: இமாசலபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: இமாசலபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி
முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இமாசலபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 58 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இமாசலபிரதேச அணி தரப்பில் அங்கித் மைனி 3 விக்கெட்டும், கன்வார் அபினய் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இமாசலபிரதேச அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரஷாந்த் சோப்ரா 68 ரன்னும், ரிஷி தவான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.