அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 2 March 2019 9:45 PM GMT (Updated: 2 March 2019 7:10 PM GMT)

அகில இந்திய கல்லூரி கிரிக்கெட் போட்டியில், எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

5-வது பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கல்லூரி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் எத்திராஜ்-ஏ.எம்.ஜெயின் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஏ.எம்.ஜெயின் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை எத்திராஜ் அணி 8.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அணி 21 ரன் வித்தியாசத்தில் ஜே.பி.ஏ.எஸ். அணியை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆர்.கே.எம்.விவேகானந்தா-லயோலா (காலை 8.30 மணி), குருநானக் ஸ்டார்ஸ்-குருநானக் (பகல் 12.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story