கிரிக்கெட்

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் + "||" + The first one-day match is the Sri Lanka-South Africa match today

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
முதலாவது ஒரு நாள் போட்டியில், இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
ஜோகன்னஸ்பர்க்,

இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. அதுவும் இரண்டு டெஸ்டிலும் இலக்கை ‘சேசிங்’ செய்து வியப்பூட்டியது.


அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெஸ்ட் போட்டி தோல்வியால் நிலைகுலைந்து போன பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இலங்கை அணி மலிங்கா தலைமையில் களம் இறங்குகிறது. டெஸ்ட் தொடர் வெற்றியால் இலங்கை வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இலங்கை அணி இதுவரை விளையாடிய 4 நேரடி ஒரு நாள் தொடர்களிலும் தோல்வியே தழுவி இருக்கிறது. இந்த முறை நிலைமையை மாற்றிக் காட்டும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.