ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ப்ளே மீண்டும் தேர்வு


ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ப்ளே மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 3 March 2019 3:38 AM GMT (Updated: 3 March 2019 3:38 AM GMT)

ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காகவும், விதிகளை மாற்றம் செய்வதற்காகவும் ஆலோசனை வழங்க ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி உருவாக்கப்பட்டது . இதன் தலைவராக கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கும்ப்ளே இருந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பதவிக்கு கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.  காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ படையினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. ஆனது ஐ.சி.சி.யிடம் கேட்டிருந்தது.

இங்கிலாந்து நாட்டில் வருகிற மே மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.  இது தவிர்த்து பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.

Next Story