அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட்: பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, லயோலா ‘சாம்பியன்’


அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட்: பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, லயோலா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 4 March 2019 9:54 PM GMT)

அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் லயோலா அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

சென்னை,

5-வது பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கல்லூரி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி-எத்திராஜ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஷ்வதி 75 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய எத்திராஜ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களே எடுத்தது. இதனால் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் குருநானக் ‘ஏ’-லயோலா அணிகள் சந்தித்தன. இதில் குருநானக் நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லயோலா அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. லயோலா அணியில் ராஜ்குமார், சுதன் அரைசதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.


Next Story